Skip to main content

இடைத்தேர்தலில்  பாஜக ஆதரவு அரசு வேண்டுமா...வேண்டாமா...சவால் விட்ட எம்.பி!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதனால், அந்த 3 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படும் என சில வாரங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. கூடவே தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று அறிவித்துள்ளார்.
 

mp



இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்., 21 தேதி தேர்தல் நடத்தப்படுவதாகவும், வாக்கு எண்ணிக்கை அக்., 24 தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 23 தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், "விக்கிரவாண்டியில் அளிக்கப்படும் வாக்கு திமுகவா அதிமுகவா என்பதை முடிவு செய்வதற்கல்ல , தமிழ்நாட்டில் பாஜக ஆதரவு அரசு வேண்டுமா? வேண்டாமா ? என்பதற்கானது" என்று பதிவிட்டுள்ளார். மேலும் இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதியிலும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் வெற்றிபெற தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.  

சார்ந்த செய்திகள்