Skip to main content

பா.ஜ.க. நண்பர்களின் ஆக்ஸிஜன் சதி! பலியாகும் நோயாளிகள்!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021
ddd

 

ஆக்ஸிஜன் இல்லாமல் மூச்சுத் திணறுகிறது இந்தியா. கொரோனாவால் சுமார் 1.3 கோடி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெறுகின்றனர். இரண்டாவது அலையின் தொடக்கத்திலேயே கொரோனா பாதித்தவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. அதிக மூச்சுத்திணறலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. சுமார் 20 லட்சம் பேர் ஆக்சிஜன் சப்போர்ட்டில் இருப்பதால் இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித் துள்ளது. ஆக்ஸிஜன் சப்ளை பற்றாக்குறையால் வட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து இறந்துவருகின்றனர். இதுதொடர்பாக, பல்வேறு சமூக அமைப்புகளும் பா.ஜ.க. மோடி அரசு மீது குற்றம்சாட்டுகின்றன. "மோடியே ராஜினாமா செய்' என்கிற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட்டாகி வருகிறது.

 

அவசரமாக ஆலோசித்த பிரதமர் மோடி, "ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்கவேண்டும், அவற்றின் கொள்ளளவு எவ்வளவோ அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய வேண்டும்' என உத்தர விட்டார். அதோடு, நீண்ட மாதங்களாகக் கிடப்பில் இருந்த 162 ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளுக்கான லைசென்ஸ் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு லைசென்ஸ் வழங்க முடிவாகியுள்ளது.

 

இந்நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை யால் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராஜேஸ்வரி, பிரேம், செல்வராஜ், லீலாவதி, ராஜேந்திரன் உட்பட 7 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் உறவினர்கள் மருத்துவமனை வாசலில் கோஷமிட்ட னர். அவர்களிடம் பேசியபோது, ""கடந்த 3 நாட்களாக வார்டுகளில் ஆக்ஸிஜன் சப்ளை சரியாக இல்லை. டாக்டர்களிடம் சொன்ன போது, "உங்களுக்குத் தனியா வேணும்னா வேற ஆஸ்பிட்டலுக்குப் போங்க, இல்லையா நீங்க ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கி வந்து தாங்க'ன்னு சொன்னாங்க. டீன் சாந்தி, ஆர்.எம்.ஓ., டாக்டர்கள், நர்ஸ்கள் என வரிசையாக முறை யிட்டபோதும் நட வடிக்கை எடுக்கவில்லை அதனால்தான் இறந்தார்கள்'' என்றார்கள்.

 

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், ""இங்கும் 1,600 பெட் உள்ளது, அதில் 560 பெட்ஸ் கோவிட் நோயாளிகளுக்கானது. அதில் கொரோனா தீவிர சிசிக்சைப் பிரிவில் 59 பேர், கோவிட் அல்லாத தீவிர சிகிச்சைப் பிரிவில் 62 பேர் என 121 பேர் ஆக்ஸிஜன் சப்போர்ட்டில் இருந்தனர். இறந்த ஏழுபேரில் ஒருவர் மட்டுமே கோவிட் பாசிட்டிவ் நோயாளி, மூவர் பாசிட்டிவ்வாக இருந்து நெகட்டிவாக மாறியவர்கள், ஒருவர் கிட்னி பெயிலியர், கார்டியா அரெஸ்ட் வந்து இறந்தார்கள். ஆக்ஸிஜன் இல்லாததால் இறந்தார் கள் என்றால், மற்றவர்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் ஏற்படவில்லை. அதனால் இது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட இறப்பில்லை'' என்றார்.

 

ddd

 

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள அணைக் கட்டுத் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான தி.மு.க. மா.செ. நந்த குமார், ""வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப் பேட்டை மாவட்ட மக்கள் இந்த மருத்துவக் கல்லூரியை நம்பி சிகிச்சைக்காக வருகின்றனர். அனைவரும் ஏழை மக்கள். அ.தி.மு.க. அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே இந்த இறப்புக்குக் காரணம். ஆக்ஸிஜன் பிரச்சினையால் இறந்ததை மாவட்ட ஆட்சியர் மறைப்பது வெட்கக்கேடானது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கவேண்டும்'' என்றார்.

 

மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, வேலூர் வந்து விசாரித்தபோது... ""இங்கு 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சிலிண்டர்கள் உள்ளன. அதில் தோராயமாக 13 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் உள்ளது. தினமும் சராசரியாக 1,350 லிட்டர் ஆக்ஸிஜன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஸ்டோரேஜ் சென்ட ரில் இருந்து வார்டுக்கு செல்லும் குழாயில் டெக்னிக்கல் பிராப்ளமாகி, அதனைக் கண்டறிந்து சரி செய்வதற்குள் இப்படியொரு விபரீதம் ஏற்பட்டுவிட்டது'' என்றுள்ளார்கள். பிரச்சினையை சால்வ் செய்துவிட்டார்களா என்பதையும் அறிந்துகொண்டு சென்றுள்ளார்.

 

ddd

 

மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களோ, ""கொரோனாவின் இரண்டாம் அலையில் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, கேரளா, உத்திரப்பிரதேசம், டெல்லி, சத்திஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், அரியானா, மத்தியப்பிரசேதம் போன்ற மாநிலங்களில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள் ளது. மொத்தமாக இந்திய மருத்துவமனைகளுக்குத் தற்போதைய தேவை, 1,400 மெட்ரிக் டன் எனக் கணக்கிடப்படுகிறது.

 

இந்தியாவில் பெரியதும், சிறியதுமாக சுமார் 500 கம்பெனிகள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்கின்றன. தினசரி 5,913 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப் பட்டது, தற்போது 6,200 மெட்ரிக்டன்னாக உற்பத்தி அதிகரித்துள்ளது. இவ்வளவு உற்பத்தி செய்யப்பட்டாலும் அதில் அதிகபட்சமாக 20 சதவிதம் மட்டுமே மருத்துவமனைகளுக்கானது. மருத்துவத் துக்கான ஆக்ஸிஜன் உற்பத்தி தனி ரகம். அதே போல் தரக் கட்டுப்பாடும் உள்ளது. மீதியுள்ள 80 சதவீதம் வேறு தளத்தில் ஆட்டோமொபைல், எஃகு உற்பத்தி மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

 

ஐநாக்ஸ், லைன்ட் இன்டியா, கோயல் எம்.ஜீ. என சில பிரபலமான கம்பெனிகள் ஆக்ஸிஜன் உற்பத்தியில் கோலோச்சுகின்றன. ஐநாக்ஸ்தான், தினசரி 2,000 டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலையை வைத்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு பல தொழிற்சாலைகள் நாடு முழுவதும் உள்ளன. முன்பு ஒரு சிலிண்டர் விலை 100 முதல் 150 வரை இருந்ததை, கொரோனாவைக் காரணம் காட்டி தற்போது 500 முதல் 2 ஆயிரம் ரூபாய்வரை விலை யை உயர்த்தியுள்ளன. வெளிமார்க்கெட்டில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். இந்த கார்ப்பரேட் கம்பெனிகள், பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் நண்பர்கள். இதனாலயே புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க லைசென்ஸ் கேட்ட 162 கம்பெனிகளுக்கு வழங்கவில்லை. அதனால்தான் இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டு பல உயிர்கள் போகின்றன.

 

"தற்போதைய உடனடித் தேவைக்காக 50 ஆயிரம் டன் மருத்துவ ஆக்ஸிஜனை வெளிநாடுகளில் வாங்க இந்திய சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது. மற்ற நாடுகளிலும் ஆக்ஸிஜன் தேவை இருப்பதால் நமக்கு கிடைக்குமா என்கிற கேள்வியும் எழுகிறது' என்றார்கள். இதில் இன் னொரு வேதனை என்னவென்றால், இதே 50 ஆயிரம் டன் ஆக்ஸிஜனை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து, காசு பார்த்துள்ளன, மத்திய அரசின் ஒத்துழைப்புடன் செயல்படும் இந்த நிறுவனங்கள். கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 1.80 லட்சத்தில் இருந்து 7.20 லட்சம் லிட்டர் ஆக்ஸிஜன் ஸ்டோ ரேஜுக்கான வசதியை தமிழக சுகாதாரத்துறை ஏற்படுத்தி யுள்ளது. இன்னும் 10 நாட்களுக்கான ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது. ஆனால், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், மாநிலத்துக்கு வரவேண்டிய கூடுதல் ஆக்ஸிஜனை மத்திய அரசு முறையாகத் தந்தால் மட்டுமே உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.

 

 

சார்ந்த செய்திகள்