Skip to main content

கள்ளக்குறிச்சி மட்டும் தான் தொகுதியா ? கடுப்பில் தேமுதிக வேட்பாளர்கள் !

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு நான்கு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி வேட்பாளராக விஜயகாந்த் மைத்துனர்  எல்.கே . சுதீஷ் போட்டியிடுகிறார் .மீதமுள்ள மூன்று தொகுதியான விருதுநகரில் அழகர்சாமியும் ,வட சென்னையில் மோகன்ராஜும் , திருச்சியில் இளங்கோவனும் போட்டிபோடுகின்றனர் . இன்னும் தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் கட்சி தலைமையிடம் இருந்தும் ,கூட்டணி கட்சியிலிருந்தும் தேர்தல் செலவுக்காக பணம் வந்து சேராததால் தேமுதிக வேட்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டுள்ளனர். 
 

suthish



தேர்தலில் போட்டியிடும் மாற்று கட்சி வேட்பாளர்கள் இப்ப இருந்தே கட்சி நிர்வாகிகளையும் , தொண்டர்களையும் கவனிக்க ஆரம்பித்துவிட்டனர் இதனால் தேர்தல் வேலைகள் மிகவும் துரிதமாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர். தேமுதிக வேட்பாளர்கள் கூட்டணி கட்சிகளிடம் பணம் செலவுக்கு பணம் கேட்க அவர்களோ இன்னும் பணம் தராமல் இழுத்தடித்துக் கொண்டுள்ளனர். இதுமட்டுமில்லாமல் கட்சி மேலிடமும் தேர்தல் செலவுக்கு பணம் தராததால் மிகவும் கடுப்பில் உள்ளனர் . தேமுதிக மேலிடமோ கள்ளக்குறிச்சி தொகுதியை மட்டும் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கின்றனர்.இதில் ஒரு சில கட்சி நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி தொகுதியை தவிர மீதமுள்ள தொகுதியில் தேமுதிக கவனம் செலுத்தவில்லை என்ற தகவலும் கூறிவருகின்றனர்.   

சார்ந்த செய்திகள்