தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3.30 மணி வரையில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 153 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 80 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
தி.மு.க. கூட்டணியின் முன்னிலை நிலவரங்கள்:
தி.மு.க- 119,
காங்கிரஸ்- 17,
ம.தி.மு.க.- 4
வி.சி.க.- 4,
சி.பி.எம்.- 2,
சி.பி.ஐ.- 2,
பிற கட்சிகள்- 5.
அ.தி.மு.க. கூட்டணியின் முன்னிலை நிலவரங்கள்:
அ.தி.மு.க.- 71,
பா.ஜ.க.- 3,
பா.ம.க.- 5,
பிற கட்சிகள்- 1.
இதில், கீழ்வேளூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் சி.பி.எம். வேட்பாளர் நாகை மாலி 16,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கீழ்வேளூர் தொகுதியில் சி.பி.எம். மற்றும் பாமக ஆகிய வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்கள்
தபால் வாக்குகள்:
சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி - 700
பாமக வேட்பாளர் வடிவேல் இராவணன் - 249
மொத்த வாக்குகள்:
சிபிஎம் - நாகை மாலி 67988
பாமக - வடிவேல் இராவணன் 51003
பாமக வேட்பாளர் வடிவேல் இராவணனைவிட 16,985 வாக்குகள் அதிகம் பெற்று சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றுள்ளார். மேலும் தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் அவர் பெற்றுள்ளார்.