Skip to main content

"தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது" - கே.எஸ்.அழகிரி பேட்டி!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

CONGRESS PARTY LEADER KS ALAGIRI PRESSMEET

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் கட்சி இரண்டாம் கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கேட்டதாகவும், தி.மு.க. தலைமை 24 தொகுதிகள் வரை தர முன்வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, "தி.மு.க. - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை. தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு சுமுகமாக இருந்தது. தி.மு.க.வுடன் நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும். காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்பதை தி.மு.க.விடம் கூறினோம். தி.மு.க. கூட்டணியில் அனைவரும் உள்ளோம் என்ற நோக்கில்தான் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். மு.க.ஸ்டாலின்- ராகுல்காந்தி இணைந்து பரப்புரை மேற்கொள்வது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்" என்றார். 

CONGRESS PARTY LEADER KS ALAGIRI PRESSMEET

 

கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு 41 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8  தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தற்போதைய நிலையில், தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சட்டமன்றத் தொகுதிகள் என மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது. மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் தி.மு.க. தலைமை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

லண்டன் சென்று வந்த மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
chief minister discussion with students who visited London

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் லண்டனுக்குச் சென்று பயிற்சி பெற்றுத் திரும்பிய மாணவர்கள் இன்று தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பள்ளிக் கல்வி முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பைத் தொடர்வதற்கான 'நான் முதல்வன்' திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நான்  முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் 25 பேர் கடந்த வாரம் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக லண்டன் சென்றிருந்தனர். இரண்டு வார பயிற்சிக்குப் பின் சென்னை திரும்பி நிலையில் இன்று பிற்பகல் ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் மாணவ  மாணவியர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார்.  

Next Story

'என் சகோதரிக்கும் ஆதரவளிக்க வேண்டும்'-ராகுல் எடுத்த முடிவு

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
' want to support my sister' - Rahul's decision

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அந்த தொகுதியில் அவரின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றியும் பெற்றார். தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியது.

ராகுல் காந்திக்கு தேசத்தை காக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே ராகுல் காந்தியை புரிந்துகொண்டு கேரள மக்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் மக்கள் வருத்தப்படக்கூடாது என கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சுதாகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

14 நாட்களில் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை அறிவித்துள்ளார். 'ரேபரலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதி மக்களுமே என் மனதுக்கு நெருக்கமானவர்கள். வயநாடு தொகுதி மக்களின் அன்பை மறக்க மாட்டேன். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவேன்' என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தியின் முடிவை தொடர்ந்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 'ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இல்லை என்ற உணர்வே வரவிடமாட்டேன். வயநாடு மக்களுக்காக கடினமாக உழைத்து நல்ல பிரதிநிதியாக செயல்படுவேன். நாங்கள் இருவருமே வயநாடு மற்றும் ரேபரலி தொகுதியில் தொடர்ந்து இருப்போம்' என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.