ப.சிதம்பரம் மீதான வழக்கு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி மீதும் புகார் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, கே.எஸ்.அழகிரி, தன் குடும்பத்தாரோடு சேர்ந்து, சிதம்பரத்தில் காமராஜர் பெயரில் கடல்சார் அறிவியல் தொழில் நுட்பக் கல்லூரி என்ற நிறுவனத்தை நடத்திக்கிட்டு இருக்கார். மாணவர்களிடம் இந்த ஆண்டு 42 கோடி ரூபாய் அளவிற்குக் கட்டணமாக வசூலிச்ச இந்த நிறுவனம், இதுவரை எந்தவிதப் பாடமும் நடத்தாமல் பயிற்சியும் கொடுக்காமல், வெறுமனே சர்டிபிகேட்டை மட்டும் கொடுத்துருக்குதாம்.

கொதிப்படைந்த மாணவர்கள் இது தொடர்பா மும்பையில் இருக்கும் கப்பல் போக்குவரத்துத் துறையின் டைரக்டர் ஜெனரலுக்குப் புகார்களை அனுப்பி யிருக்காங்களாம். அதனால் இப்ப மும்பையில் இருந்து விளக்கம் கேட்டு கே.எஸ். அழகிரிக்கு நோட்டீஸ் வந்திருக்கு. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ப.சி. குடும்பம் போல, கே.எஸ்.அழகிரி குடும்பத் துக்கும் நெருக்கடி ஏற்படும். ரொம்ப அப்செட்டா இருக்கும் அழகிரி, 17-ந் தேதி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் கூட கலந்துக்கலைனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.