Skip to main content

தமிழகத்தில் ஏன் வர முடியலை...எது பண்ணாலும் எதிர்ப்பு...கோபத்தில் அதிரடி திட்டம் போட்ட பாஜக!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி அரசு 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதில் என்னவென்றால் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் தேனி தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. இந்தியா முழுவதும் பாஜகவிற்கு ஆதரவு அதிகமாக இருந்தாலும் தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் பாஜகவிற்கான ஆதரவு குறைவாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவின் எதிர்ப்பு அலை அதிகமாகவே காணப்படுகிறது. 

 

bjp



இதனால் பாஜக தலைமைக்கு தமிழக பாஜக நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியை நிலவியது. தெலுங்கானா கவர்னராக தமிழிசை பதவி ஏற்று ஒரு மாதம் ஆகியும் தமிழக பாஜக தலைவரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கு தமிழக பாஜக நிர்வாகிகள் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் அதிருப்தியும் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதே போல் முத்தலாக் விஷயத்தில் பாஜக எடுத்த நிலைப்பாடு தான் வேலூர் தொகுதியில் அதிமுக, பாஜக கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. அதனையடுத்து காஷ்மீர் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சியனர் தீவிரம் காட்டியதும் பாஜகவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன் அமித்ஷா இந்தி பற்றி கூறிய கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அமித்ஷா தன்னுடைய நிலைப்பாட்டில் இந்தி பற்றி கூறிய கருத்துக்கு விளக்கம் அளித்தார். 

 

bjp



அதன் பின்பு எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக கட்சியை வளர்க்க பாஜக தலைமை சில அதிரடி திட்டங்களை வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, அதிமுக, திமுக இரண்டு திராவிட கட்சிகளும் நாடார் சமுதாய மக்களுக்கும், வன்னியர் சமுதாய மக்களுக்கும் அதே போல் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று அம்மக்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது. 


இதனால் ஜாதி அரசியலை முன்னெடுத்து அந்த குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு பதவி கொடுத்து அவர்களது ஆதரவை பெரும் நோக்கத்தில் பாஜக காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு சான்றாக சமீபத்தில்  தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜனுக்கு பதவி கொடுக்கப்பட்டது. இதே போல் DRDO மற்றும்  ISRO வின் உயர் பதவியில் நாடார்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறுகின்றனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது வருகிற சட்டமன்ற தேர்தலையும், பாஜக கட்சியை தமிழகத்தில் நிலை நிறுத்தவும் பாஜக திட்டம் போட்டு தற்போது இருந்தே செயல்பட ஆரம்பித்துவிட்டது என்கின்றனர். 

சார்ந்த செய்திகள்