Skip to main content

திமுகவிற்கு செக் வைக்க உத்தரவு போட்ட பாஜக... ஆர்வம் காட்டிய காங்கிரஸ்... ப.சி.க்கு சோனியா போட்ட உத்தரவு!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, சென்னையில் தி.மு.க. தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் நடத்திய மெகா பேரணி பற்றி மத்திய, மாநில அரசுகள் என்ன நினைக்குது என்று விசாரித்த போது,  மத்திய அரசு கூறிய படி, மாநில அரசு பேரணியை தடுத்திருக்கலாம் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது.  பேரணியை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எடப்பாடி அரசுக்கு பா.ஜ.க. அரசு உத்தரவு போட்டதாக கூறப்படுகிறது. எடப்பாடி அரசும் மத்திய அரசுக்கு உத்தரவாதம் கொடுத்தது என்கின்றனர்.  அதனால் தான் போலீஸ் அனுமதி மறுப்பு, பேரணிக்கு முந்தைய நாள் இரவு திடீர் வழக்கு என்று நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் நீதிமன்றம் தி.மு.க.வுக்குப் பச்சைக் கொடியைக் காட்டியது. ஸ்டாலின் தலைமையில் நடந்த பிரம்மாண்டமான பேரணி, சென்னை மாநகரையே குலுக்கும் வகையில் நடத்தப்பட்டிருப்பதாக சொல்கின்றனர். மேற்கு வங்கத்தில் மம்தா நடத்திய பேரணியைப் போல் இந்தப் பேரணியும் மத்திய பா.ஜ.க. அரசை ஏகத்துக்கும் மிரட்டியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். 
 

dmk



அதே போல் திமுக நடத்திய பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் அதீத ஆர்வம் காட்டியதாக சொல்கின்றனர். தி.மு.க. தலைமையிலான இந்த பேரணியில் காங்கிரஸ் சார்பில் முதலில் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி தான் கலந்து கொள்வதாக இருந்தது. மறுநாள் டெல்லியில் நடக்க இருக்கும் ஆலோசனைக் கூட்டத்துக்காக அங்கே தங்கி இருந்த ப.சிதம்பரத்தைத் தொடர்புகொண்ட சோனியா, நீங்கள் சென்னையில் தி.மு.க. நடத்தும் பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் சார்பில் கலந்து கொள்ளுங்கள் என்று  கூற, அதைத் தொடர்ந்து உடனடியாக பிளைட் ஏறி, பேரணியில் கலந்துக்கிட்டார் ப.சி. காங்கிரஸைப் பொறுத்தவரை இனியேனும் அரசியல் களத்தில் தன்னை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளவேண்டும் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது. ஜார்கண்ட்டில் அதற்கு தெம்பூட்டும் ரிசல்ட் கிடைக்கத் தொடங்கியதுமே, காங்கிரசின் வேகம் இன்னும் கூடியிருப்பதாக சொல்கின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்