Skip to main content

அதிமுக, திமுக வேட்புமனுதாக்கல் கலைக்கட்டியது திருவாரூர்...

Published on 25/03/2019 | Edited on 25/03/2019



நாடாளுமன்றதேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ததால் திருவாரூர் தொகுதி, தேர்தல் கலைகட்டியது.
 

இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் பாராளுமன்றம் தேர்தல் மற்றும் தமிழக 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களை வருகின்ற பதினெட்டாம் தேதி நடத்த இருக்கிறது. இதனையொட்டி திமுக, அதிமுக,அம, மு,க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக தேர்தலை சந்திக்க காத்திருக்கின்றன. அதிமுக திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களையும் நடத்தி வருகின்றனர்.
 

இந்த நிலையில் இன்று திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் அலுவலருமான முருகதாஸிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல் அதிமுக வேட்பாளரான ஜீவானந்தமும் அவரிடமே வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாகை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுக தலைமையிலான கூட்டணியில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜ் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ஆனந்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் தழை.ம.சரவணனும் மனு தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக அதிமுக வேட்புமனு தாக்கல் செய்ய வருகையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையிலான அதிமுக கூட்டணி கட்சியினர் தொண்டர்கள் ஏராளமானோர் பேரணியாக வேட்பாளருடன் அணிவகுத்து வந்தனர். இது பார்ப்பவர்களை தேர்தல் விதிமீறல் இல்லையா, ஆளுங்கட்சிக்கு தேர்தல்  விதி கிடையாதா என முணுமுணுக்க வைத்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்