நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,பாஜக கூட்டணியில் பாமக கட்சி இடம்பெற்றது.இதில் பாமக கட்சிக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும்,ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாகவும் உறுதியளித்தனர்.இந்த நிலையில் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட தருமபுரி தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் செல்வகுமார் போட்டியிட்டார்.மேலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வகுமாரை விட 70 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, தேர்தலில் தோல்வி அடைந்தாலும் இந்த தொகுதி வளர்ச்சிக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் கூறினார்.மேலும் தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தவறு இருந்தால் திருத்திக் கொள்வோம் என்றும் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், மோடி அரசு இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் என்றும் கூறினார்.இந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்ததால் அவர்களுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்குமா என்பது கேள்விகுறி தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.