Skip to main content

முதலில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வரட்டும் ஆதரவு தருகிறேன்... தினகரனின் திடீர் முடிவு!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடத்தாது என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தமிழக அரசிடம் கூறிவருகின்றனர். மேலும் டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
 

admk



இந்த நிலையில், அதிமுக அரசு சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அவர்களை நான் ஆதரிப்பேன் என தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.மேலும் முதலில் எடப்பாடி பழனிச் சாமி அரசு அதிமுக அரசு சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரட்டும். கொண்டுவந்தால் நான் ஆதரவாக வாக்களிப்பேன். அதனால் தீர்மானம் கொண்டுவரட்டும். அதன் பிறகு பார்ப்போம் என தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்