Skip to main content

அமித்ஷா பாஜக தலைவர் பதவியை ராஜினாமா?

Published on 28/05/2019 | Edited on 28/05/2019

நடந்து முடிந்த 17ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 351 இடங்களை பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.இதில் பாஜக மட்டும் 303 இடங்களை பிடித்து தனி பெரும்பான்மை பெற்றுள்ளது.தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது.இந்த தொடர் வெற்றிக்கு காரணம் என்று சொல்லப்பட்டவர் பாஜக தலைவர் அமித்ஷா. தற்போது உள்ள நிலவரப்படி அமித்ஷா மத்திய அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.மேலும் பாஜகவின் உத்தேச அமைச்சர் பட்டியலில் அவருக்கு நிதி மற்றும் உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

 

bjp



இதனால் பாஜகவின் விதி முறை படி அவர் மத்திய அமைச்சர் பதவியை ஏற்றால் கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவார் என்ற தகவலும் வந்துள்ளது.பாஜகவின் விதிமுறை படி ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதாகும்.எனவே வெகு விரைவில் பாஜக தலைமை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் அடுத்த பாஜக தலைவர் யார் வருவார் என்று அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர்.பாஜக தலைமை பொறுப்புக்கு அடுத்து ஜே.பி.நட்டா வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வருகின்றன.
 

சார்ந்த செய்திகள்