Published on 12/10/2020 | Edited on 12/10/2020

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத். தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான இவர், நேற்று தனி விமானம் மூலம் மாலத்தீவு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ரவீந்திரநாத் உடன் சரவணன் பழனியப்பன், விஜயகுமரன், பாரதிய ஜனதா தமிழக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் ஆறுமுகநயினார் மற்றும் விஜயநாத் வினாயகமூர்த்தி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தப் பயணத்தின் நோக்கம் பெருந்தொழில் முதலீடு சம்மந்தமானதா, தனித்தீவுகளை விலைக்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தையா அல்லது பணப் பரிமாற்ற ஏற்பாடுகளுக்கான முதல்கட்ட நடவடிக்கையா என்பது குறித்து தகவல்கள் தெளிவுபடுத்தப்படவில்லை.
-வணங்காமுடி