
தமிழகத்தில் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு, தற்போது தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருந்தது. அதேபோல் நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி இருந்தது. இந்நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அதிமுகவின் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியிட இருக்கின்றனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் மற்றும் வருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை முன்னதாகவே அதிமுக தலைமை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.