Published on 04/07/2019 | Edited on 04/07/2019
திமுக இளைஞர் அணிச் செயலாளராக பணியாற்றிய திமுக மு.பெ.சாமிநாதனை, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக, கழக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்'' என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.



இந்தநிலையில் மு.பெ.சாமிநாதனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கழக சட்டதிட்ட விதி 26 பிரிவு 1ன்படி ஏற்கனவே உயர்நிலை செயல்திட்டக்குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுடன் மு.பெ.சாமிநாதன் தலைமைக்கழகத்தால் நியமிக்கப்படுகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.