Skip to main content

அ.தி.மு.க.வில் நடந்த அதிரடி மாற்றம்... நான்கு நிர்வாகிகளுக்கு அடித்த ஜாக்பாட்!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

admk

 


சமீபத்தில் தமிழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய அமைப்பின் கீழ் செயல்படும் ஊராட்சி செயலாளர் பொறுப்பு ரத்து செய்யப்படும் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது. ஊராட்சி செயலாளர்களாகப் பணியாற்றியவர்களுக்கு விரைவில் மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறிய அக்கட்சி, அதிமுகவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் மற்றும் துணை நிர்வாகப் பொறுப்புகள் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.
 


இந்த நிலையில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு சென்னை, வேலூர், கோவை, மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகிகளை அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை - அஸ்பயர் சுவாமிநாதன், வேலூர் - கோவை சத்யன், கோவை - ஜி.ராமச்சந்திரன், மதுரை - ராஜ் சத்யன் ஆகியோர் ஐ.டி. செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிவித்துள்ளனர். 


 

 

சார்ந்த செய்திகள்