Skip to main content

சசிகலா புஷ்பாவை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சியில் எடப்பாடி!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எம்.பி சமீபத்தில் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.  அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

admk



இந்த நிலையில், பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பாவை கடந்த 5-ந் தேதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் மாஜி மந்திரியுமான சண்முகநாதனை, அவரோட பண்டாரவளை வீட்டில் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் எடப்பாடி கவனத்துக்கு உளவுத்துறையினர் மூலம் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. தனக்கு அமைச்சர் பதவியையும் தன் ஆதரவாளர் ஒருத்தருக்கு ஆவின் சேர்மன் பதவியையும் கேட்டுக்கிட்டிருந்த சண்முக நாதன், அது கிடைக்காத அதிருப்தியில், சசிகலா புஷ்பா பாணியில் பா.ஜ.க.வுக்குத் தாவி, தங்கள் பலத்தை சட்டமன்றத்தில் குறைத்து விடுவார் என்கிற அச்சம், எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்