Skip to main content

“குழந்தைகளை ஏன் அரசியலில் ஈடுபடுத்த வேண்டும்..?” - பொன். ராதாகிருஷ்ணன்

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

"Why should children be involved in politics?" - BJP Radhakrishnan

 

திருச்சி பால்பண்ணை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேர்காணல் நடந்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதால் அதிகப்படியான இடங்களை கூட்டணி கட்சியான அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி கேட்டுப் பெறுவோம்” என்றார். 

 

தொடர்ந்தது பத்திரிகையாளர்கள், உ.பி. பாஜக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி விலகள், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குழந்தைகள் நிகழ்ச்சி உள்ளிட்ட கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு; “தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இதுபோன்ற இடமாற்றங்கள் இருக்கும். ஆனால், இதெல்லாம் தாண்டி பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது, ஆட்சியும் பிடித்திருக்கிறது.

 

டெல்லியில் தொற்று அதிகமாக பரவி வருவதால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். அதனால் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஒரு கட்சியை வைத்துக் கொண்டு ஒரு மாநிலத்தை ஓரங்கட்டும் நிலையை ஒரு காலமும் பாஜக எடுக்காது. எந்த ஒரு கட்சியும் வைத்துக்கொண்டு ஆட்சியையும் வைத்து கொண்டு எந்த மாநிலத்தையும் புறந்தள்ளி வைக்க இந்த அரசாங்கம் முடிவெடுக்காது.

 

பிரதமர் நரேந்திர மோடி இன்றைய காலகட்டத்தில் நிலைமையை வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் செயல்படுத்தக்கூடிய மிகத் தெளிவான முடிவுகளை எடுத்து வருகிறார். அதற்கான பலன் கிடைத்து வருகிறது. அதை கேலியும், கிண்டலும் செய்வது முறையற்ற விஷயம். ஊடகங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். சின்ன குழந்தைகளை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்பது என்னுடைய கருத்து. சின்ன குழந்தைகளை ஏன் அரசியலில் ஈடுபடுத்த வேண்டும்” என்றார். இப்பேட்டியின்போது, மாநில துணைத் தலைவர் கருப்பு.முருகானந்தம், மாநில இணைப் பொருளாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்