Published on 03/07/2019 | Edited on 03/07/2019
தமிழக சட்டசபை கூட்ட தொடர் ஜூன் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று அமைச்சர் அன்பழகன் கல்லூரிகளில் செய்து வரும் மாற்றங்கள் குறித்து சட்டசபையில் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு எம்.எல்.ஏ தனது கட்சியை சேர்ந்த இன்னொரு எம்.எல்.ஏ.விடம் சீக்கிரம் சட்டசபையை முடித்தால் இந்தியா- பங்களாதேஷ் கிரிக்கெட் மேட்ச் பாக்கலாம் என்று புலம்பி இருக்கிறார். இந்த செய்தி ஒரு ஆங்கில ஊடகத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்றைய கிரிக்கெட் போட்டியை பார்க்க மாணவர்கள் மட்டுமின்றி, சட்டசபையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களும் ஆர்வமாக சட்டசபையை சீக்கிரமாக முடிக்க சொன்னது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டசபையில் விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு மூத்த சட்டமன்ற உறுப்பினர் வெளியே போனது இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுக அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் தனக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏவிடம் 'இந்த விவாதம் சீக்கிரம் முடிந்தால் சீக்கிரமா இந்தியா மேட்ச் பார்க்கணும் என்று சொல்லியிருக்கிறார். அதுபோல் நேற்று பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் சட்டசபை கூட்டம் முடியும் முன்னரே எழுந்து சென்றுவிட்டனர். இந்த சட்டசபை நிகழ்வை தெரிந்த பொது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.