Published on 04/06/2019 | Edited on 04/06/2019
நேற்று அதிமுக சார்பாக நடத்தப்பட்ட இப்தார் நோன்பு நிகழ்ச்சி துணை முதல்வர் பன்னீர்செல்வம்,அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள்,நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவில்லை.இதன் பின்னணி என்னவென்று விசாரித்த போது நேற்று நடந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அதிமுகவில் இருக்கும் 7 எம்.எல்.ஏ.க்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறவில்லை.இதனால் கடும் அப்செட்டான எடப்பாடி இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி உளவுத்துறையிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளார்.உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் மேலும் டென்ஷனாக இருப்பதாக சொல்லப்படுகிறது.மேலும் ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் ஆப்சென்ட்டான விஷயத்தை உளவுத்துறை மூலம் அறிந்த எடப்பாடி,பின்னர் அதிமுக எம்.எல்.ஏக்களை சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.அப்போதும் அந்த அதிருப்தி 7 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திமுகவிற்கு ஆதரவாக உள்ளார்கள் என்று உளவுத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வால் எடப்பாடி தரப்பு கடும் டென்ஷனில் இருப்பதாக சொல்லப்படுகிறது.