Published on 13/06/2020 | Edited on 13/06/2020
![mk stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/lXBaUMdhVQyoVGUoMg5l8mMMLjfioR7XKwCDatbjJ4I/1592058215/sites/default/files/inline-images/mks2_2.jpg)
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கரோனா தொற்று உறுதியான அதிமுக எல்.எல்.ஏ. பழனி முழுமையாக நலமடைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், CoronaVirus தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருபெரும்புதூர் அதிமுக MLA கே.பழனி முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்! என்றுகூறி உள்ளார்.