நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு, ஒவ்வொரு கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்த நிலையில், இன்று (01-04-24) காலை 11.30 மணி அளவில் மாவட்ட தேர்தல் அலுவலர் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வேப்பேரி ரித்தர்டன் சாலையில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணிகளை பார்வையிட்டு பூத் ஸ்லிப் வழங்கினார்.