சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதேபோல் உதயநிதி ஸ்டாலினும் தீவிர பிரச்சாரத்தில் இருந்தார். ஓய்வில்லாமல் தொடர்ந்து பிரச்சாரத்தில் இருந்ததாலும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி என்பதாலும் ஓய்வெடுக்க வெளிநாடு செல்லலாமா என ஸ்டாலின் குடும்பத்தினர் யோசனை மேற்கொண்டனர்.
கரோனா தாக்கம் பல நாடுகளிலும் இருப்பதால், வெளிநாடு செல்வதற்கான யோசனையைக் கைவிட்டனர். பின்னர் கொடைக்கானல் செல்லலாம் என ஸ்டாலின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி கொடைக்கானல் செல்ல திட்டமிட்டனர்.
சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் சென்றார் ஸ்டாலின். அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். ஸ்டாலினுடன் மனைவி துர்கா, மகன், மருமகள், பேரன், மகள், மருமகன் என 17 பேர் செல்கின்றனர். வரும் 19ஆம் தேதி வரை அங்கு தங்கியிருந்து ஓய்வெடுக்கிறார் என்றும், அப்போது திமுக அமைச்சரவை பட்டியலை தயாரிக்கிறார் என்றும் கட்சியினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.