

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஜினிகாந்த், கமல்ஹாசனை அடிக்கிற அடியில் வேறு எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றாது என்றார். இது விஜய்க்கும் பொருந்துமா என்ற நிருபரின் கேள்விக்கு, எல்லோருக்கும் பொருந்தும் என பதிலளித்தார்.
சீமானின் இந்த பேட்டியை கண்டித்து மதுரை எங்கும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ''வன்மையாக கண்டிக்கிறோம். தமிழனாய் பிறந்து தமிழனையே விமர்சனம் செய்ய உனக்கு என்ன தகுதி இருக்கு தளபதியை குறை கூருவதர்க்கு. ஜில் ஜங் ஜக் சீமானே மன்னிப்பு கேள். மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாணவரனி தலைமை'' எனவும்
''அரசியலின் செல்லாக்காசு. ச்சீ சீமானே... வண்மையாக கண்டிக்கிறோம். எல்லா தேர்தலிலும் அடி வாங்கும் உனக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு? உடனடியாக மன்னிப்பு கேள்... இது எச்சரிக்கை அல்ல கட்டளை... மதுரை வடக்கு மாவட்ட இளைஞரனி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்'' எனவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.