15- வது தமிழக சட்டப்பேரவையின் 8 ஆவது கூட்டத்தொடர் நேற்று (06.01.2020) காலை 10.00 மணியளவில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேரவையில் பேச அனுமதிக்காத நிலையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். திமுகவை தொடர்ந்து டிடிவி. தினகரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
*முக்குலத்தோர் புலிபடை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வெளிநடப்பு. குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) January 7, 2020
கருணாஸ் பேட்டி
?அன்னிக்கே கூவத்தூர்ல விட்டுட்டு வந்திருந்தா இந்த அபத்த பேச்சை கேக்க வேண்டிய அவசியமிருக்காது.?
இந்த நிலையில் இன்று சட்ட பேரவையின் கூட்ட தொடரின் போது முக்குலத்தோர் புலிபடை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் குடியுரிமை சட்ட திருத்த மசோதவை அனுமதிக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வெளிநடப்பு செய்தார். சட்ட பேரவையில் இருந்து கருணாஸ் வெளிநடப்பு செய்தது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், *முக்குலத்தோர் புலிபடை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வெளிநடப்பு. குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கருணாஸ் பேட்டி. அன்னிக்கே கூவத்தூர்ல விட்டுட்டு வந்திருந்தா இந்த அபத்த பேச்சை கேக்க வேண்டிய அவசியமிருக்காது என்று கருணாஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.