Skip to main content

சசிகலாவை வரவேற்க 35 அடி உயர 'கட் - அவுட்'!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

dddd


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

 

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, பெங்களூரு புறநகர்ப் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா வருவார் எனத் தெரிவித்திருந்த நிலையில், பிப்.7 ஆம் தேதிக்குப் பதில் பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்குத் தமிழகம் வருவார் என நேற்று (04.02.2021) டி.டி.வி.தினகரன் தெரிவித்திருந்தார். 

 

பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட, போஸ்டர், பேனர் வைத்த அதிமுகவினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னை திருவொற்றியூரில் சசிகலாவை வரவேற்று 35 அடி உயர கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே எல்.இ.டி. அமைக்கப்பட்டு அவரை வரவேற்கும் வாசகங்கள் அமைந்துள்ளன. 

 

 

 

சார்ந்த செய்திகள்