
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தின் கோதாலி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் கோதாலி கிராமத்தில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இந்த இவ்விழாவில் பங்கேற்பதற்காக பாஜக மத்திய இணையமைச்சர் ரக்சா காட்சே மகள்(மைனர்) தனது தோழியுடன் சென்றுள்ளார். அப்போது சில ஆண்கள் மத்திய இணையமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய இணையமைச்சர் ரக்சா காட்சே தனது பாஜக ஆதரவாளர்களுடன் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். மேலும், மத்திய இணையமைச்சரின் மகளுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் எளிய வீட்டுப் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “நான் மத்திய இணையமைச்சராக இந்த புகாரை கொடுக்க வில்லை ஒரு தாயாக இந்த புகாரை கொடுத்திருக்கிறேன். மாநில அரசு கடுமையான சட்டங்களை அமல்படுத்தி இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க வழி செய்ய வேண்டும்” என்று மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வரும் நிலையில் பாஜக இணையமைச்சரே மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.