ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து அதன்பின் டிக்கெட்டை கேன்சல் செய்த போது இளைஞர் ஒருவருக்கு 33 ரூபாய் ஜிஎஸ்டி வரி பிடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த சுஜித் சுவாமி (வயது 30) என்ற பொறியாளர் கடந்த 2017-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் கோட்டாவில் இருந்து டெல்லி செல்ல ரயில்வே டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளார். வேறு வேலை இருந்ததால் பின்னர் டிக்கெட்டை ரத்து செய்து விட்டார்.
ரூ.765 செலுத்தி அவர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். ரத்து செய்ததால் சேவை கட்டணம் பிடிக்கப்பட்டு ரூ.665 அவரது வங்கி கணக்குக்கு வந்துள்ளது. சேவைக்கட்டணத்துடன் சேர்த்து ரூ.100 பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் ரூ.65 மட்டுமே பிடித்தம் செய்திருக்க வேண்டும். கூடுதலாக ரூ.35 அவருக்கு வரியாக பிடித்தம் செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் ரயில்வே துறையை தொடர்புகொண்டு கேட்ட போது சரியான பதில் இல்லை. எனவே அவர் நீதிமன்றத்தை அணிகினார். அப்போது ரயில்வே சார்பில், "அவர் டிக்கெட் முன்பதிவு செய்தபோது ஜிஎஸ்டி அமலில் இல்லை, அதற்கு பிறகு தொகை அனுப்பியதால் ஜிஎஸ்டி தொகை பிடித்தம் செய்யப்பட்டது" என தெரிவித்தது. இதையடுத்து ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பே தான் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டேன் என கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார்.
பின்னர் மீதி தொகையை தர ஒப்புக்கொண்ட ரயில்வே நிர்வாகம் தற்போது அவரது வங்கிக்கணக்கில் அந்த தொகையை செலுத்தியுள்ளது. ஆனால் அதிலும் 35 ரூபாய்க்கு பதிலாக 33 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளது. இதனை பற்றி விசாரித்த போது மீதமுள்ள தொகை ஜிஸ்டி வாரியாக பிடித்துக்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு நடந்த இந்த சம்பவம் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.