நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ தடை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைனில் பட்டாசு விற்பனை கூடாது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷன் அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும் இத்தீர்ப்பில், அதிக மாசு, புகை மற்றும் சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. குறிப்பிட்ட அளவிலான சத்தம் உடைய பட்டாசுகளைதான் விற்பனை செய்ய வேண்டும் என்று பட்டாசுகளை விற்பனை செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விற்பனை செய்பவர்கள் மத்திய அரசு குறிப்பிட்டுள்ல கட்டுப்பாடுகளுக்குள் இல்லை என்றால் நண்பகல் பட்டாசு கடை உரிமையாளரின் உரிமம் தடை செய்யப்படும். 12:00 மணி முதல் இரவு 11:55 மணி வரை பட்டாசுகளை வெடிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெடிக்கப்படும் பட்டாசுகளுக்கும் காலவரையறை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.