Skip to main content

தவறாக நடக்க முயன்ற டாக்ஸி டிரைவர்; கீழே குதித்த இளம்பெண் - பதைபதைக்க வைக்கும் காட்சி

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

 young woman jumped off her bike to escape a taxi driver who tried to walk her wrong

 

நள்ளிரவு நேரத்தில் தவறாக நடக்க முயன்ற டாக்ஸி டிரைவரிடம் இருந்து தப்பிக்க இளம்பெண் ஒருவர் பைக்கில் இருந்து கீழே குதிக்கும் சிசிடிவி காட்சிகள் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டிக்கு அருகே உள்ளது இந்திரா நகர் சுற்றுவட்டாரம். எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்தப் பகுதிக்கு கடந்த 23 ஆம் தேதியில் இரவு 11 மணியளவில் இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். இந்திரா நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் அந்த இளம்பெண், அங்கிருந்து தனது தோழியின் வீட்டிற்கு செல்வதற்காக பைக் டாக்ஸியை புக் செய்துள்ளார்.

 

இதையடுத்து, அந்த பெண்ணின் லொகேஷனுக்கு வந்த பைக் டாக்ஸி டிரைவர், அவரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு சேர வேண்டிய இடத்திற்கு தனது வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதன்பிறகு, அந்த பெண்ணிடம் ஓடிபி பெற வேண்டும் எனக்கூறி செல்போனை வாங்கிக்கொண்ட டாக்ஸி டிரைவர், அந்த பெண் கூறிய பாதையில் செல்லாமல் தொட்டபள்ளாப்பூர் சாலை நோக்கிச் செல்லும் மாற்றுப்பாதையில் சென்றுள்ளார். இதனால் பதற்றமடைந்த இளம்பெண், "ஹெலோ எக்ஸ்கியூஸ் மீ.. எதுக்கு இந்த ரூட்ல போறீங்க.. என்ன பண்றீங்க நீங்க" எனக் கேட்டதற்கு, "அந்த வழிய மூடி வெச்சிருக்காங்க. இதுதான் ஷார்ட்கட்" எனக் கூறி மழுப்பியுள்ளார். அந்த இளம்பெண் என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் அந்த டாக்ஸி டிரைவர் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். டிரைவரின் செயலால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடும் பைக்கில் இருந்து கீழே குதித்துள்ளார்.

 

இதைக் கண்ட பைக் டாக்ஸி டிரைவர், கண் இமைக்கும் நேரத்தில் தனது டூவீலரை அங்கிருந்து வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார். அந்த சமயம் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சிலர், பைக்கில் இருந்து கீழே விழுந்ததால் காயமடைந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன்பிறகு, பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் அடிப்படையில், தப்பியோடிய டாக்ஸி டிரைவரை அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது, போலீசாரின் விசாரணையில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞர் ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயது தீபக் என்பதும், சம்பவத்தன்று அந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தீபக்கை கைது செய்த செய்த போலீசார், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், நள்ளிரவு நேரத்தில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட டாக்ஸி டிரைவரின் வீடியோ காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

- சிவாஜி

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.