Published on 17/01/2020 | Edited on 17/01/2020
கேரளாவில் கேக் தயாரிப்பதில் உலக சாதனை செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூரில் கேரள பேக்கர்கள் சார்பில் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக 6.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு கேக் தயாரிக்கப்பட்டது. சுமார் 1500 பேக்கர்கள் இணைந்து இந்த கேக்கை தயாரித்துள்ளனர்.
இதற்காக 12,000 கிலோ சக்கரையும், 15,000 கிலோ மாவையும் பயன்படுத்தி இந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கை தயாரிக்க 4 மணி நேரம் ஆகியுள்ளது. சுமார் 27,000 கிலோ எடை கொண்ட அந்த மெகா கேக் 10 செமீ அகலம் கொண்டது. முன்னதாக 3.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட கேக் உலக சாதனை படைத்திருந்த நிலையில், கேரளாவில் தயாரிக்கப்பட்ட இந்த கேக் அந்த சாதனையை முறியடித்து கின்னஸில் இடம்பிடித்துள்ளது.