சுமார் 150 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் ஆப் -ஐ பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், யூ ட்யூப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும், வலைப்பக்கங்களிலும் விளம்பரங்கள் வரும். அதன் மூலமாக வருவாய் ஈட்டுவார்கள். மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் வாட்ஸ் அப்பில் மட்டுமே விளம்பரம் வராமல் இருந்தது. தற்போது வாட்ஸ் ஆப்பிலும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வாட்ஸ் அப்பின் துணை தலைவர் க்ரிஸ் டேனியல்ஸ் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது சொல்லப்படவில்லையென்றாலும், வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விளம்பரங்கள் ஸ்டேட்டஸ் பகுதியில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் ஆப்பின் உரிமைகளை வாங்கிய பிறகு அவ்வப்போது ஒரு மாற்றம் அல்லது அப்டேட் வரும். அதில் ஒன்றுதான் இந்த விளம்பரம்.