Published on 15/05/2021 | Edited on 15/05/2021

இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. தினசரி மூன்று லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகிவருகிறது. தினமும் கரோனாவால் பாதிக்கப்பட்ட, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.
மேற்கு வங்கத்தில் நேற்று (14.05.2021) ஒரேநாளில் 20,846 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. மேலும், 136 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மம்தா பானர்ஜியின் இளைய சகோதரர் ஆஷிம் பானர்ஜி கரோனாவால் உயிரிழந்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.