Skip to main content

இந்த ஆண்டுகளில் பிறந்த சிறார்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் - மத்திய அரசு விளக்கம்!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

children vaccine

 

இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு, பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முற்பகுதியில் 15 -18 வயது சிறார்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை திட்டமிட்டுள்ளது.

 

இந்தநிலையில் தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், 2005, 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் பிறந்த சிறார்கள், அதாவது ஏற்கனவே 15 வயது ஆனவர்களும், 2023 ஜனவரி 1 ஆம் தேதி 15 வயதை எட்டுபவர்களும் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

 

இதற்கிடையே இந்திய முழுவதும் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு தேசிய நிபுணர் குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அந்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

பைக் மீது தீராத காதல்-15 பைக்குகளை திருடிய சிறுவன் கைது

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Unrequited love for bikes-17-year-old boy arrested for stealing many bikes

17 வயதில் எண்ணற்ற வண்டிகளை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேலையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஆர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதாகும் ஆர்யா பன்னிரண்டாம் வகுப்பு பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட சிறுவன் என்றுகூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சூர்யா போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். சில மாதங்களாக அங்கு இருந்தவன் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கடலூர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து ரிலீஸ் ஆனான். வெளியே வந்தவன் மீண்டும் பைக் திருட்டில் ஈடுப்பட்டுள்ளான். கடலூர், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் மூன்று வண்டிகளையும் திருவண்ணாமலையில் 15 வண்டிகளும்  திருடியதாக தெரிய வருகிறது.

மார்ச் 7 ஆம் தேதி காலை 7 மணி அளவில் குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்பரசு தலைமையில் திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோடு அங்காளம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நிலையில் அழைத்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளான்.

தொடர் விசாரணையில் பைக் திருடன் என்பது தெரிய வந்த நிலையில் திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான். இந்த சிறுவனுக்கு பைக் மீது தீராத காதல் இருந்துள்ளது. திருடிச் செல்லும் பைக்கை விற்பனை செய்யாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்துள்ளான். அவன் விருப்பப்படும் போது மட்டும் விரும்பிய பைக்கை எடுத்து ஓட்டிவிட்டு மீண்டும் பாதுகாப்பாக தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருந்துள்ளான். இந்த தகவலை அவன் சொன்னதும் போலீசார் ஆச்சரியமடைந்துள்ளனர். அவன் திருடிய 15 பைக்குகளை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். பைக் திருடு போனதாக புகார் தந்தவர்களை வரவைத்து ஆவணங்களை சரிபார்த்து அந்த பைக் ஒப்படைக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

வழக்கமாக பைக் திருடுபவர்கள் உடனடியாக அதனை வேறு ஒருவருக்கு விற்பதும் இல்லையென்றால் ஸ்பேர் பார்ட்ஸ்களை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்பதை தான் இதுவரை காவல்துறையினர் கேள்வி பட்டுள்ளனர். ஆனால் பைக் மீது கொண்ட காதலால் விரும்பிய பைக் திருடிக் கொண்டு போய் வீட்டிலேயே பத்திரமாக வைத்து அதை சுத்தம் செய்து பளபளப்பாக வைத்துக் கொண்டிருப்பவனை நினைத்து காவல்துறையினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.