மத்தியப் பிரதேசத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான உமா பாரதி, மதுக்கடை மீது கல்வீசும் காட்சி வெளியாகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மாவட்டத்தில் உள்ள ஆசாத் நகரில் அமைந்துள்ள மதுக்கடை ஒன்றின் மீது கல் வீசுகையில், அவரைச் சூழ்ந்திருந்த தொண்டர்களும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். தொழிலாளர்கள் தங்களது வருவாயை மது அருந்துவதற்கே செலவிடுவதாகவும், எனவே, அவர்களை நம்பியுள்ள அவரது குடும்பத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் உமா பாரதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மதுக்கடை மீது கல்வீசித் தாக்கிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தை ஆளும் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு, சமீபத்தில் மதுபானங்களின் விலையை 20% குறைத்திருந்தது. இந்த நிலையில், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உமா பாரதி போராட்டத்தில் இறங்கியுள்ளார். மேலும், தனது போராட்டம் மாநில அரசுக்கு எதிரானது இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில், அக்கட்சியின் தலைவரே இத்தகைய செயலில் ஈடுபட்டது, அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1) बरखेड़ा पठानी आझाद नगर, बीएचईएल भोपाल , यहाँ मज़दूरों की बस्ती में शराब की दुकानों की शृंखला हैं जो की एक बड़े आहाता में लोगों को शराब परोसते हैं । pic.twitter.com/dNAXrh1jRY— Uma Bharti (@umasribharti) March 13, 2022