Published on 08/10/2018 | Edited on 08/10/2018

நேற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜியோ நிறுவனர் முக்கேஷ் அம்பானி பேசுகையில், 4,000 கோடி ரூபாயை உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அடுத்த இரண்டு வருடங்களில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கிட்டத்தட்ட 2,385 அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அதிவேக இன்டர்நெட் சேவை தரப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். குறிப்பாக தேவபூமி உத்தரகாண்டை டிஜிட்டல் தேவபூமியாய் மாற்றப் போகிறேன் என்றார். மேலும் ஜியோ நிறுவனம் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் புதிய நிறுவனங்களும் தொழில்களும் தொடங்கும் என்றும் அதைத்தவிர சுற்றுலாத்துறை, அரசு சேவை, கல்வி மற்றும் மருத்துவத்திலும் முன்னேற்றங்களை கொண்டுவரும் என்று அறிவித்துள்ளார்.