Skip to main content

விதிகளை மீறிய இந்திய விமான நிறுவனம் - தற்காலிக தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்!

Published on 19/08/2021 | Edited on 19/08/2021

 

indigo

 

இந்திய விமான நிறுவனமான இண்டிகோவின் விமானங்கள், தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு ஐக்கிய அரபு அமீரகம்ஒருவாரம் தடை விதித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வோர் இரண்டு முறை கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக முதல் கரோனா பரிசோதனையையும், பயணம் செய்துகொள்வதற்கு நான்கு மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தில் இரண்டாவது கரோனா பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும். ஆனால் இந்த விதிகளை மீறி கரோனா பரிசோதனை செய்துகொள்ளாத பயணிகளையும் இண்டிகோ விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றி சென்றதனால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

இண்டிகோ விமான நிறுவனம் மறைமுகமாக இந்த தடையை உறுதி செய்துள்ளது. விமானங்களை இயக்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் செல்லும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ஆகஸ்ட் 24, 2021 வரை ரத்து செய்யப்படுவதாக அந்த நிறுவனம் முதலில் கூறியது.

 

ஆனால் தற்போது, இண்டிகோவின் செய்தித்தொடர்பாளர் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல், இண்டிகோ விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்