ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள இந்திய அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு பிறகு இந்தியா, ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. இந்த பயணத்தின் முடிவில் பிரதமர் மோடி இந்திய அதிகாரிகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது தனக்காக பிரத்யேகமாக சோபா போட்டதை வேண்டாம் எனக் கூறிய பிரதமர் மோடி, அதிகாரிகளுக்காக போடப்பட்டிருந்த நாற்காலியிலேயே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த வீடியோவை பியூஸ் கோயல் தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் இதற்காக பிரதமர் மோடியை பாராட்டி வருகின்றனர்.
PM @NarendraModi जी की सरलता का उदाहरण आज पुनः देखने को मिला, उन्होंने रूस में अपने लिए की गई विशेष व्यवस्था को हटवा कर अन्य लोगों के साथ सामान्य कुर्सी पर बैठने की इच्छा जाहिर की। pic.twitter.com/6Rn7eHid6N
— Piyush Goyal (@PiyushGoyal) September 5, 2019