Skip to main content

புதுச்சேரியில் இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

Tributes to those who train accident in Puducherry

 

ஒடிசா இரயில் விபத்தையடுத்து புதுச்சேரி தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு விழாக்கள் ரத்து செய்யப்பட்டு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 250க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையே உலுக்கி நாட்டு மக்கள் அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

இத்தகைய சோகமான சூழ்நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், மனித நேயத்திற்காகவும் உரக்கக் குரல் எழுப்பி பாடுபட்ட கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதோடு, இன்று நடைபெறும் நூற்றாண்டு தொடக்க விழாவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

 

அதனடிப்படையில் புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலம், புதுச்சேரி மாவட்டத்தில் 23 தொகுதிகளில் உள்ள 736 கிளைக் கழகங்கள் தோறும் கலைஞர் திருவுருவப் படம் வைத்து இனிப்பு வழங்கியும் கழக கொடியேற்றியும் நலத்திட்டம் வழங்கும் விழா என நூற்றாண்டு தொடக்க விழா முழுவதையும் ரத்து செய்வதாக தி.மு.க மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான இரா.சிவா எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்த அனைத்து தொகுதி தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேரறிஞர் அண்ணா சிலை அருகில் ஒன்று கூடி மாநில அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் திருவுருவச் சிலைக்கு மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து மாநில திமுக சார்பில் பயங்கரமான இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

 

இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், சிபிஐ மாநில செயலாளர் சலீம், சிபிஎம் மாநில செயலாளர் ராஜாங்கம், மதிமுக செயலாளர் கபிரியேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் பொழிலன், ஏஐடியுசி மாநில செயலாளர் சேது செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.