Published on 29/05/2021 | Edited on 29/05/2021

ஜி.எஸ்.டியிலிருந்து கரோனா தடுப்பூசி மருந்துக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு ஒன்று மத்திய நிதி அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் எட்டு மாநிலங்களின் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. என் 95 முகக் கவசம், பல்ஸ் ஆக்சிமீட்டர், வென்டிலேட்டர், சானிடைசர், பிபிஇ உடை, ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு வரி குறைப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சகம் இக்குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் தெலுங்கானா, கேரள மாநில நிதி அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் உத்தரப்பிரதேசம், ஒடிசா நிதியமைச்சர்கள், குஜராத், மகாராஷ்டிரா மாநில முதல்வர்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.