Skip to main content

ஃபோர்டு தொழிற்சாலையை வாங்கும் டாடா மோட்டார்ஸ்! 

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

Tata Motors to buy Ford factory

 

குஜராத்தில் உள்ள முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் வாங்குவது உறுதியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நாளை (30/05/2022) கையெழுத்தாகவுள்ளது. 

 

அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம், இந்தியாவில் உள்ள சென்னை, குஜராத் தொழிற்சாலையை மூடிவிட்டு வெளியேறப்போவதாக கடந்த 2021- ஆம் ஆண்டு அறிவித்தது. இதனையடுத்து, குஜராத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க, இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் முயற்சிகளை மேற்கொண்டது. 

 

இதையடுத்து, ஃபோர்டு மற்றும் டாடா மோட்டார்ஸ் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள குஜராத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மாநில முதலமைச்சர் பூபேந்தர படேல் முன்பு நாளை (30/05/2022) ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 

 

எனினும், சென்னையில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை எந்த நிறுவனம் வாங்கும் என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது.  

 

சார்ந்த செய்திகள்