இந்தியாவில் உள்ள மக்கள் பெரும்பாலும் இணைய தள பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றன. ஆன்லைன் பணப்பரிவர்தனையை மக்கள் எளிதாக மேற்கொள்ளும் வகையில் கூகுள் நிறுவனம், ஓலா நிறுவனம், உபேர் நிறுவனம், அமேசான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆன்லைன் பணப்பரிவர்தனைகள் மேற்கொள்ளும் வகையில் "மொபைல் செயலியை" அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த வகை செயலிகளை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கூகுள் பே (GOOGLE PAY) , அமேசான் பே (AMAZON PAY) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் பணப்பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை வெளிநாடுகளில் சேமித்து வைத்து வருகின்றனர்.
இதனால் இந்தியர்களின் தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது. இது தொடர்பான நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பணப்பரிமாற்றம் நடந்தால், அந்த தகவல்களை வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் சேமித்து வைக்கக் கூடாது என்றும், இந்தியாவில் தான் சேமித்து வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 24 மணி நேரத்திற்கு தகவல் சேமிப்பு விவகாரத்தில் கூகுள் பே மற்றும் அமேசான் பே நிறுவனங்கள் முடிவெடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கெடு விதித்துள்ளது.