மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் பாஜக கேரளா மாநிலத்தின் திருச்சூர் தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி திருச்சூர் தொகுதிக்கு பாஜக சார்பில் முன்னணி மலையாள நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில் போட்டியிடும் துஷார் வெள்ளாபள்ளி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என அறிவித்தவுடன், ராகுலுக்கு எதிராக பலம் வாய்ந்த போட்டியாளர் வேண்டும் என்பதால் துஷார் வயநாடு தொகுதிக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து அவர் போட்டியிடுவதாக இருந்த திருச்சூர் தொகுதி தற்போது கோபி சுரேஷுக்கு வழக்கப்பட்டுள்ளது.