மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

Advertisment

imran khan wishes modi

இதனையடுத்து மே26 ஆம் தேதி குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க மோடி உரிமை கோருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், "தெற்காசியாவின் அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்திற்காக, பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.