Skip to main content

வாக்கு ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு வாக்கு எண்ணிக்கை... மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

வாக்கு ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

election

 

இந்த வருடம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு செலுத்தும் முறையில் புதிய நடைமுறையாக வாக்கு ஒப்புகை சீட்டு முறை கொண்டுவரப்பட்டது. வாக்கு செலுத்திய பிறகு வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் வாக்காளர் எந்த சின்னத்திற்கு வாக்களித்தாரோ அந்த சின்னம் 7 வினாடிகள் தெரியும். இந்த நடைமுறையில் வாக்கு ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு வாக்கு எண்ணக்கோரி எதிர்கட்சிகளான காங்கிரஸ், திமுக உட்பட 21 கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

 

 

அந்த மனுவில்,பதிவாகும் வாக்குகளில் 50 சதவிகிதத்தை வாக்கு  ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. தற்போது தேர்தல் ஆணையம்  வாக்கு ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு வாக்கு எண்ணிக்கை மேற்கொள்வது சாத்தியமற்றது, மேலும் அப்படி செய்தால் தேர்தல் முடிவுகள் வெளியாக 6 நாட்கள் தாமதமாகும் என பதிலளித்தது.

 

 அதனையடுத்து அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்