Published on 30/01/2019 | Edited on 30/01/2019
![jmhgjmhgjm](http://image.nakkheeran.in/cdn/farfuture/-wI5qlisF_aLWJ1Ju1BXnmFnh-T7nayOicUCplYjVGE/1548843470/sites/default/files/inline-images/babu-std.jpg)
ஆந்திர மாநிலம், அனந்தபூரில் நேற்று செர்லோபள்ளி அணைக்கட்டிலிருந்து கிருஷ்ணா நதி நீரை திறந்து வைத்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு வந்த 87 வயதுடைய முத்தியாலம்மா என்ற பெண் தனது கையிலிருந்த 50,000 ரூபாய்க்கான காசோலையை முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் கொடுத்தார். அந்த காசோலை எதற்காக என சந்திரபாபு நாயுடு கேட்ட போது அமராவதியை கட்டமைப்பதற்கான உதவியாக எனது பென்ஷன் தொகையை சேமித்து அதிலிருந்து தருகிறேன் என கூறினார். அதனை வாங்கிக்கொண்டு நன்றி தெரிவித்து, அந்த மூதாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநில தலைநகர் அமராவதியை கட்டமைக்க நிதி உதவி செய்த மூதாட்டி முத்தியாலம்மாவை வெகுவாக பாராட்டினார்.