Skip to main content

மாணவர் சேர்க்கை தகுதிப் பட்டியல்... சன்னி லியோன் முதலிடம்? -அதிர்ச்சியில் கல்லூரி நிர்வாகம்!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

sunny leone - actress - bollywood - kolkatta - ug - college - merit list

 

மேற்கு வங்கம், கொல்கத்தாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் இளங்கலைப் படிப்பில் சேர்வதற்கான மாணவர் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பிரபல பாலிவுட் நடிகை, சன்னி லியோன் பெயர் முதலிடத்தில் இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கொல்கத்தாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று தனது இணையத்தில் 12- ஆம் வகுப்பு முடித்து, இளங்கலை ஆங்கிலப் படிப்பிற்கு விண்ணப்பித்த, கல்வித் தகுதியுள்ள மாணவர்களின் பட்டியலை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் 12- ஆம் வகுப்பில் நான்கு பாடத்தில் முழு மதிப்பெண் எடுத்து முதலிடத்தில் இருந்தார் சன்னி லியோன். இது பெரும் அதிர்வலைகளை இணையத்தில் உண்டாக்கியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம், "வேண்டுமென்றே யாரோ தவறாக இந்தத் தகவல்களைப் பதிவிட்டுள்ளனர். நாங்கள் அதை மாற்றச் சொல்லிவிட்டோம். இருப்பினும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்." என்றனர்.

 

இதனிடையே இதைத் தனது ட்விட்டரில் பகிர்ந்து "உங்கள் அனைவரையும் அடுத்த செமஸ்டர் தேர்வில் சந்திக்கிறேன், எனது வகுப்பில் நீங்கள் அனைவரும் இருப்பீர்கள் என நம்புகிறேன்" என கிண்டலாக பதிவிட்டுள்ளார் சன்னி.

 

கடந்த பிப்ரவரி 2019- இல், பீகாரில் நடைபெற்ற ஜூனியர் எஞ்ஜினியர் (ஜே.இ.) பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலில் சன்னி லியோனின் பெயர் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

“போலீசை டார்லிங்னு கூப்பிட்ட போதை ஆசாமி” - நீதிமன்றம் அதிரடி

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Kolkata court takes action Calling women 'darling' is a crime

கடந்த 2015ஆம் ஆண்டு, அந்தமானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மயபந்தர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீசார் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் நின்று கொண்டிருந்த ஜானக்ராம் என்பவர், பெண் போலீசாரை ‘டார்லிங்’ என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாக, அந்த பெண் போலீஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், ஜானக்ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு வந்த போது ஜானக்ராமுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. 

நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனை தீர்ப்பை எதிர்த்து, ஜானக்ராம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி ஜெய செங்குப்தா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘முன்பின் தெரியாத பெண்களை ‘டார்லிங்’ என அழைப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் குற்றங்களுக்கு ஈடானது. பாலியல் நோக்கத்துடன் இவ்வாறு அழைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கலாம்’ எனக் கூறினார். இதனையடுத்து, குற்றவாளியின் மூன்று மாத சிறைத் தண்டனையை ஒரு மாத சிறைத் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார்.