Published on 22/04/2019 | Edited on 22/04/2019
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. குண்டுவெடிப்பில் லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 8 இடங்களில் நேற்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 500 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 35 பேர் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். இதில் 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.