Skip to main content

டெல்லி வன்முறை - உயிரிழப்பு 46 ஆக அதிகரிப்பு!

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த வாரம் நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன. 



இதனையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

 

சார்ந்த செய்திகள்