Published on 29/09/2018 | Edited on 29/09/2018

நேற்று உச்சநீதிமன்றத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதை பல்வேறு மக்கள் ஆதரித்தும், எதிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில் சிவசேனா,” சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி அளித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை கண்டித்து அக்கட்சி அக்டோபர் 1-ம் தேதி மாநில தழுவிய 12 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பிலான பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.